மக்தப் பாடசாலைகளை வக்பு சபைக்கு கீழ் கொண்டு வருவதற்கு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை மற்றும் இலங்கை வக்பு சபை என்பவற்றுக்கு இடையில் புரிந்துணர்வு காணப்பட்டுள்ளது.
மக்தப்களை வக்பு சபையின் கீழ் கொண்டு வருதல் தொடர்பில் அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமாவும் இலங்கை வக்பு சபையும் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திடத் தீர்மாணித்துள்ளன.
இதுதொடர்பாக நேற்று (02.07.2021) Zoom ஊடாக நடைபெற்ற கலந்துரையாடலில் புரிந்துணர்வு உடன்படிக்கையின் நகல் கலந்துரையாடப்பட்டதோடு உடன்பாடுகளும் எட்டப்பட்டதாக முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் Facebook உத்தியோகபூர்வ தளத்தில் தகவல் வௌியிடப்பட்டுள்ளது.
இந்த அடிப்படையில், அடுத்த வாரமளவில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளது.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர், பொதுச் செயலாளர், பிரதம நிர்வாக அதிகாரி உட்பட பல உலமாக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
வக்பு சபையின் தலைவர், முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர், உதவிப் பணிப்பாளர், உட்பட பல உத்தியாகத்தர்களும் கலந்து கொண்டனர்.