July 1, 2022

 

முல்லைத்தீவு, அம்பாறை, கேகாலை ஆகிய மாவட்டங்களின் 3 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் இன்று காலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

Covid19 பரவலைத் தடுக்கும் தேசிய செயலணியின் பிரதானி இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனை அறிவித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் பின்வருமாரு,

முல்லைத்தீவு மாவட்டம் – செய்மலை கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவின் நாயாறு மீன்பிடி பகுதி.

கேகாலை மாவட்டம் – மிஹிபிட்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவின் மாதெய்யாவ கிராமம்.

அம்பாறை மாவட்டம் – மருதமுனை-3 கிராம உத்தியோகத்தர் பிரிவு 

இந்த பிரதேசங்கள் இன்று காலை 6 முதல் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, ஏற்கனவே தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த கேகாலை மாவட்டத்தின் ஹெலமட கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும் குருநாகல் மாவட்டத்தின் இலுப்புகெதர கிராம உத்தியோகத்தர் பிரிவின் வில்கொட கிராமம் ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.