July 2, 2022

Covid-19 பரவுவதைத் தடுப்பதற்காக மாகாணங்களுக்கு இடையில் விதிக்கப்பட்டிருந்த பயணத் தடை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடை மேலும் 14 நாட்களால் நீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதன் பிரகாரம், இன்று (05-07-2021) வரை அமுல்படுத்தப்பட்டிருந்த பயணத் தடை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அத்தியாவசிய சேவைகள் என அடையாளப்படுத்தப்பட்ட பொலிஸ், இராணுவம், சுகாதாரம், மின்வலு, பெற்றோலியம், நீர்வழங்கல், ஊடகத்துறை உட்பட தனியார் மற்றும் அரச நிறுவனங்களில் பணிபுரிவோர் மாகாணங்களுக்கு இடையில் பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த துறைகளில் உள்ளவர்கள் தங்களின் அலுவலக அடையாள அட்டை அல்லது நிறுவன அதிகாரமளிக்கப்பட்டவரின் கையொப்பத்துடனான ஆவணம் என்பவற்றை பயண அனுமதி ஆவணங்களாகப் பயன்படுத்த முடியும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.