பாராளுமன்றம் இன்று கூடவுள்ளதுடன், சபை அமர்வுகளை இன்று முதல் (06) எதிர்வரும் வௌ்ளிக்கிழமை (09) ஆம் திகதி வரை 4 நாட்களுக்கு நடத்துவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று (05) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டது.
சபை அமர்வு காலை 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இன்றைய அமர்வில் குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை திருத்த சட்டமூலம், சித்திரவதை மற்றும் வேறு கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது கீழ்த்தரமாக நடத்துதல் அல்லது தண்டித்தல் என்பவற்றுக்கு எதிரான சமவாயம் திருத்த சட்டமூலம், குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் கீழான ஒரு கட்டளை மற்றும் காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் உறுப்பினர்களுக்கான சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரித்தல் தொடர்பான பிரேரணை ஆகிய விடயங்கள் விவாதத்திற்கு உட்படுத்தப்படவுள்ளன.
ஆளுங்கட்சியினால் கொ்ணடுவரப்படும் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை பிற்பகல் 4.50 க்கு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இதேவேனள, மின்சக்தி அமைச்சர் உதய கம்மன்பில மீது கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஜூலை மாதம் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்வதற்கும் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.