July 1, 2022

தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக ஶ்ரீலரீங்கா பொதுஜன பெரமுன தேசிய பட்டியல் உறுப்பினர் ஜயந்த கெட்டகொட இன்று பாராளுமனற செயலாளர் நாயகத்திற்கு அறிவித்துள்ளார்.

பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்கவிடம் இதற்கான எழுத்துமூல இராஜினாமா கடிதத்தை ஜயந்த கெட்டகொட இன்று (06-07-2021) கையளித்துள்ளார்.

ஜயந்த கெட்டகொட, 2000 ஆம் ஆண்டில் கொழும்பு மாவட்டத்தில் இருந்து முதல் தடவையாக பாராளுமன்றத்திற்குள் பிரவேசித்தார்.

அத்துடன்,  அந்த பாராளுமன்றம் கலைக்கப்பட்டு 2001 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் பாராளுமன்றத்திற்கு தெரிவாகினார்.

2011 இலும் பாராளுமன்றத்திற்குத் தெரிவாகியதுடன், 2020 ஆம் ஆண்டில் மீண்டும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் தேசிய பட்டியல் ஊடாக ஜயந்த கெட்டகொட பாராளுமன்றத்திற்குத் தெரிவாகினார்.

தனது இராஜினாமா குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஜயந்த கெட்டகொட, பெசில் ராஜபக்ஸவிற்காக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை மகிழ்ச்சியுடன் இராஜினாமா செய்ததாக சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.