வவுனியாவில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளை சுகாதாரப் பிரிவினர் மேற்கொண்டுள்ளனர்.
அதன் பிரகாரம், நாளைய தினம் (07-07-2021) வவுனியா நகர கிராம அலுவலர் பிரிவு, இறம்பைக்குளம் கிராம அலுவலர் பிரிவு ஆகியவற்றை உள்ளடக்கி 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த தடுபபூசி ஏற்றும் நடவடிக்கை காமினி மகாவித்தியாலயத்தில் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை முன்னெடுக்கப்படவுள்ளது.
அத்துடன், தாண்டிக்குளம், சோயா லேன், குடியிருப்பு, ஏ-9 வீதி உள்ளிட்ட வவுனியா நகரின் வடக்கு கிராம அலுவலர் பகுதி மற்றும் வைரவபுளியங்குளம் கிராம அலுவலர் பிரிவு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 60 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு காமினி மகாவித்தியாலயத்தில் பிற்பகல் 1 மணி முதல் மாலை 4 மணிவரை தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன.
எனவே, இந்த பகுதியைச் சேர்ந்த சேர்ந்த 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் தமது தேசிய அடையாள அட்டையுடன் சென்று கொவிட் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என சுகாதாரப் பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.