July 4, 2022

திருமணத் தொழில்துறையில் பாரபட்சம் காட்டப்படுவது ஏன்? 

– எம்.டி.வி புகைப்பட கலைஞர் சங்க முக்கியஸ்தர் ஒவியநாதன் கேள்வி.

கொவிட்-19 பரவல் காரணமாக நாடு முழுவதும் முடக்கப்பட்டு இரண்டரை மாதங்களை கடந்துள்ள நிலையில் தற்போது இயல்புநிலை மெல்ல மெல்ல திரும்பிவருகிறது. 

இந்தநிலையில் தொழில்துறைகள் தொடர்பில் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகின்றது. எனினும் திருமணத் தொழில்துறை சார்ந்த விடயத்தில் அரசு பாரபட்சமாக செயல்படுகின்றது என திருமணத் தொழில்துறை சார் விநியோகஸ்தர்கள் கூட்டு  (Wedding Industry Suppliers Collective) நேற்று (06.07) நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் கலந்து கொண்ட எம்.டி.வி புகைப்பட கலைஞர் சங்கத்தின் முக்கியஸ்தர் ஒவியநாதன் கேள்வி எழுப்பினார்.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள வோட்டர்ஸ் எட்ஜ் (Waters edge) மண்டபத்தில் இந்த பத்திரிகையாளர் மாநாடு நடைபெற்றது.

இங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:-

2019 ஏப்ரல் மாதம் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதலிலிருந்தே; திருமண வைபவங்களை மாத்திரம் நம்பி வாழ்கை நடாத்தும் எம்மைப்போன்றவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டு ள்ளனர். ஒரு திருமண வைபவம் நடக்குமானால், மண்டப உரிமையாளர்கள், சமையல் வேலை செய்பவர்கள், மணப்பெண் அலங்காரம் செய்பவர்கள், இசைக் கலைஞர்கள், மணமேடைக்காரகள், வீடியோ மற்றும் புகைப்பட கலைஞர்கள், பலரும் நன்மை அடைகின்றனர். ஆனால் தற்போதைய நிலையில் இவர்கள் அனைவரும் முடங்கி கிடக்கின்றனர். வீட்டுவாடகை, ஸ்ருடியோ (Studio), சிகை அலங்கார நிலைய வாடகை (Saloon), அதில் பணிபுரியும் ஊழியர்களுக்கான சம்பளம், வாகன லீஸிங், வங்கிக்கடன், கொடுக்கப்பட்ட காசோலைகளுக்கு பணம் செலுத்த வேண்டிய நிலைமை என ஏகப்பட்ட பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். நாடு முழுவதும் தற்போது ஏனைய அனைத்து துறைகலும் இயங்கிக்கொண்டுத்தான் இருக்கின்றன. எமக்கு மட்டும் ஏன் இந்த ஓரவஞ்சனை. மற்றைய விடயங்களுக்கு 25வீத அனுமதி வழங்க முடியுமானால்  திருமண வைபவங்கள் செய்ய ஏன் எமக்கு அனுமதி தரமுடியாது. அரசாங்கத்திடம் நாம் எவ்வித நிவாரண உதவிகளையும் கேட்கவில்லை. சுகாதார விதி முறைகளின்படி வைபவங்கள் நடத்த அனுமதி தாருங்கள் நாம் பிழைத்துக் கொள்வோம்.- என்றார்.

Leave a Reply

Your email address will not be published.