இலங்கை – இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் நடைபெறவிருந்த சர்வதேச ஒருநாள் மற்றும் T20 கிரிக்கெட் போட்டித் தொடர்களுக்கான அட்டவணையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் இணக்கத்துடன் இலங்கை கிரிக்கெட் அட்டவணையில் போட்டித் திகதிகளில் மாற்றங்களை செய்துள்ளது.
இரு அணிகளுக்கும் இடையில் போட்டிகளுக்கு முன்னதாக இலங்கை தேசிய கிரிக்கெட் வீரர்களும், அணியின் பணிக்குழுவினரும் சுகாதார ஒழுங்குவிதிகளுக்கு அமைவாக தங்களை தயார்படுத்திக் கொள்வதற்கு இடமளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளர் மற்றும் தரவு ஆய்வாளர் ஆகிய இருவருக்கும் Covid-19 தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே திட்டமிட்டவாறு இரண்டு நாடுகளுக்கும் இடையிலான கிரிக்கெட் தொடர்கள் ஜூலை 13 ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த நிலையில், மீள ஒழுங்குபடுத்தலின் பிரகாரம் திகதிகள் பின்வருமாரு அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும், தற்போதைய சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு இலங்கை கிரிக்கெட்டுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் பொதுச் செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார.