சீனாவில் இருந்து 2 மில்லியன் டோஸ் Sinopharm கொவிட்-19 தடுப்பூசி மருந்துகள் இன்று நாட்டிற்கு கொண்டுவரப்பட்டன.
ஶ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான இரண்டு விமானங்களில் இந்த 2 மில்லியன் டோஸ்களும் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டிருந்தன,
ஒரே தடவையில் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட அதிக எண்ணிக்கையான கொவிட்-19 தடுப்பூசி மருந்துகள் இதுவாகும்.
இதன்மூலம் எதிர்வரும் நாட்களில் கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளை மேலும் துரிதப்படுத்துவதற்கு எதிர்ப்பார்க்கப்படுவதாக அரசாங்க தகவல்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, இலங்கை மக்களுக்கு அத்தியாவசியமான ஒரு தருணத்தில் தமது விமான சேவையூடாக தேசிய செயற்பாட்டிற்கு ஒத்துழைப்பு வழங்கியதையிட்டு பெருமை கொள்வதாக ஶ்ரீலங்கன் நிறுவனம் தெரிவித்துள்ளது.