தாக்குதல் சம்பவம் ஒன்றுடன் தொடர்புட்டதாக சிலாபம் நகர சபையின் தவிசாளர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சிலாபம் சேதவத்த பகுதியில் நேற்றிரவு இரண்டு பேர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சிலாபம் நகர சபைத் தவிசாளருடன் மற்றுமொருவரும் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த இரண்டு இளைஞர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிலாபம் நகர சபைத் தவிசாளர் உட்பட சந்தேகநபர்கள் இருவரையும் சிலாபம் நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.