அரச தரப்பில் கலகக் குழுவாக அடையாளப்படுத்தப்பட்டிருந்த அமைச்சர்களான விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில உள்ளிட்ட குழுவினர் நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஸவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் தலையீட்டில், இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இந்த கல்துரையாடல் சுமுகமாக நிறைவடைந்துள்ளதுடன், எதிர்கட்சி தரப்பினால் விடுக்கப்படும் சவால்களை அரசாங்கத் தரப்பிலுள்ள அனைவரும் ஒத்துழைப்புடன் எதிர்கொள்ள வேண்டும் என இதன்போது பெசில் ராஜபக்ஸ கூறியுள்ளார்.
அரசாங்கத்திற்குள் நிலவும் பிரச்சினைகளுக்கு கலந்துரையாடல்கள் மூலம் தீர்வு காண்பதுடன், மிகவும் வலுவாக செயற்பாடுகளை மேற்கொள்வது அசியுமாகும்.
அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டுவரப்பட்ட நம்பிககையில்லா பிரேரணை ஜூலை 19 – 20 ஆம் திகதிகளில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுவதுடன், அரச தரப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒரே நிலைப்பாட்டுடன் அந்த பிரேரணையை தோற்கடிக்க வேண்டும் என இருதரப்பிலும் கருத்துப் பரிமாற்றிக் கொள்ளப்பட்டது.
அத்துடன் எதிர்காலத்தி்ல் அரசாங்கம் மீது விடுக்கப்படும் எந்தவொரு சவால் நிலைமையின் போதிலும், ஒரே நிலைப்பாட்டுடன் செயற்படுவதற்கு விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகிய தரப்பு இணக்கம் தெரிவித்ததாக மேலும் தெரியவந்துள்ளது.