இதுவரை யாழ் பல்கலைக்கழக வளாகமாக இயங்கிவந்த வவுனியா வளாகம், பல்கலைக்கழகமாக தரமுயர்த்தப்படவுள்ள நிலையில், அதன் முதலாவது துணைவேந்தராக கலாநிதி த. மங்களேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் முதல்வராக கடமையாற்றி வந்த நிலையில் த. மங்களேஸ்வரன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் வவுனியா பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வளாகமாக இதுவரைக் காலமாக இயங்கி வந்த வவுனியா வளாகம்’ எதிர்வரும் ஆகஸ்ட் 01 ஆம் திகதி முதல் ‘இலங்கை வவுனியா பல்கலைக்கழகம்’ எனத் தரமுயர்த்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் அண்மையில் அறிவித்திருந்தார்.
அதற்கமைய இலங்கை வவுனியா பல்கலைக்கழகத்தைத் தாபிப்பதற்கான முன்னேற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
அதன் ஒரு கட்டமாக யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் முதல்வர் கலாநிதி த. மங்களேஸ்வரன் முதலாவது துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.