தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமைகளில் மறுசீரமைப்புகளை மேற்கொள்வதற்காக அங்கீகரிக்கப்பட்ட 10 அரசியல் கட்சிகளிடமிருந்து முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
தேர்தல் மறுசீரமைப்பு மேற்கொள்வதற்கென நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற விசேட குழுவிற்கு இதுவரை 138 முன்மொழிவுகள் கிடைத்துள்ளதாக அந்த குழுவின் தலைவரான சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அங்கீகரிக்கப்பட்ட 10 அரசியல் கட்சிகளிடமிருந்தும் முன்மொழிவுகள் கிடைத்துள்ளதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமையில் மறுசீரமைப்புகளை மேற்கொள்வதற்கான பாராளுமன்ற விசேட குழுவின் அமர்வின்போது அதன் தலைவரான தினேஷ் குணவர்தன இந்த விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பிலான முன்மொழிவுகளை சமர்ப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் இன்றுடன் (15-07-2021) நிறைவடைந்துள்ளது.