மாகாணங்களுக்கு இடையிலான பஸ் மற்றும் ரயில் போக்குவரத்துகளை நாளை (17-07-2021) முதல் ஆகஸ்ட் முதலாம் திகதி வரை தொடர்ந்தும் இடைநிறுத்தி வைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதுதொடர்பாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம ஊடகங்களுக்கு இன்று கருத்து தெரிவித்தபோது, கடந்த புதன்கிழமை (14) முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட பஸ் மற்றும் ரயில் போக்குவரத்துகளை அரசாங்கம் தொடர்ந்தும் இடைநிறுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.
இதன் பிரகாரம் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி வரை இந்த போக்குவரத்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
கொவிட்-19 வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானத்தை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.
அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோரின் வசதிகருதி கடந்த புதன்கிழமை முதல் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்துகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
எனினும், சுகாதார நடைமுறைகள் உரிய வகையில் பின்பற்றப்படவில்லை என்ற அவதானிப்புகளை அடுத்து ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி வரை பஸ், ரயில் போக்குவரத்து சேவைகளை இடைநிறுத்த அரசாங்கம் தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் கூறினார்.