CID தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள எம்.பி. ரிஷார்ட் பதியுதீன் சுகவீனம் காரணமாக தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமக்கு சுகவீனம் ஏற்பட்டுள்ளதாக அவர் பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவித்ததை அடுத்து அவரை தேசிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் ரிஷார்ட் பதியுதீன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.