தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவராக துமிந்த சில்வா நியமிக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் வௌியாகியுள்ளன.
இந்த நியமனத்திற்குரிய ஆவணமொன்று சமூக ஊடகத் தளங்களில் பகிரப்பட்டுள்ளமை குறித்து ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரிடம் வினவியபோது, ஜனாதிபதியினால் இந்த நியமனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நியமனம் தொடர்பாக, கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணம், கட்டட மூலப்பொருட்கள் கைத்தொழில் ஊக்குவிப்பு அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதியின் கையொப்பத்துடன் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி பொது மன்னிப்பின்கீழ் விடுதலையான துமிந்த சில்வா அண்மையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்திருந்தார்.