WhatsApp விதிமுறைகளை மீறியமைக்காக சுமார் இரண்டு மில்லியன் கணக்குகளை முடக்கியுள்ளதாக WhatsApp அறிவித்துள்ளது.
கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்திய WhatsApp பயனாளர்கள் இரண்டு மில்லியன் பேரினது கணக்குகளே முடக்கப்பட்டுள்ளன.
இந்த பயனாளர்களில் 95 வீதமானோர் கட்டுப்பாட்டுகளை மீறி தகவல்களை மீண்டும், மீண்டும் ஏனையவர்களுக்கு அனுப்பியமை காரணமாகவே முடக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவினால் கொண்டுவரப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்ப சட்டங்களுக்கு அமைவாக இந்த விடயங்கள் அறிக்கையிடப்பட்டுள்ளதாக WhatsApp நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
அதிக WhatsApp பயனாளர்களைக் கொண்ட ஒரு தளமாக இந்தியா காணப்படுவதுடன், அங்கு சுமார் 400 மில்லியன் பேர் WhatsApp ஊடாக தகவல் பரிமாற்றங்களை மேற்கொள்வதாகவும் புள்ளிவிபரங்கள் குறிப்பிட்டுள்ளன.
WhatsApp தகவல் பரிமாற்ற சேவையின் நிர்வாகம் Facebook நிறுவனத்தின் கீழ் இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.