மின்சக்தி அமைச்சர் உதய பிரபாத் கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை இன்று (20) பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.
இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக 61 வாக்குகள் மாத்திரமே அளிக்கப்பட்டதுடன், பிரேரணையை எதிர்த்து 152 பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
இதற்கமைய 91 மேலதிக வாக்குகளினால் அமைச்சர் கம்மன்பில மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்பட்டது
அண்மையில் எரிபொருட்களில் விலைகள் அதிகரிக்கப்பட்டதை ஆட்சேபித்து மின்சக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின் 43 பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களுடன் நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.