இலங்கையின் பதிவுசெய்யப்பட்ட முதலாவது ஒன்லைன் சந்தா (Subscription) வணிகமான DEOBOX, தரமான அசல் டியோடரண்ட் தயாரிப்புகளை இலங்கையர்கள் பெற்றுக்கொள்ளும் வகையில் 2019 ஆம் ஆண்டு முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து, இந்த எண்ணக்கருவிற்கு பழக்கமானவர்களுக்கும் அசல் மற்றும் உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட டியோடரண்ட் வகைகளை சந்தா அடிப்படையில் பெற்றுக்கொள்ள முற்படுவோருக்கும் தமது சேவைகளை வழங்கும் நோக்கில், தற்போது அவர்கள் இங்கிலாந்து சந்தையில் காலடி எடுத்து வைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சுதார மெல்வின் மற்றும் பினர சகலசூரிய ஆகியோரை இணை நிறுவுனர்களாக கொண்டு DEOBOX ஆரம்பிக்கப்பட்டது. உலகத்தரம் வாய்ந்த அசல் தயாரிப்புகளை பெற்றுக்கொள்வதில் அதிக மக்கள் ஆர்வம் காட்டியபோது, அவர்களுக்கு பிடித்த உற்பத்திகளை சந்தா அடிப்படையில் மாதாந்தம் வீட்டிற்கே வரவழைத்து பெற்றுக்கொள்ளும் வகையில், குறித்த இருவரும் பணியாற்ற முடிவுசெய்ததன் விளைவாக DEOBOX ஆரம்பிக்கப்பட்டது.
ஏனைய வணிக நோக்கங்களுக்காக 2020 ஆம் ஆண்டு ஒக்டோபரில் DEOBOXஇல் இருந்து பினர விலகினார். அதன் பின்னர் சுதாரவுடன் DEOBOXஇன் இணை நிறுவுனராக கஷின் பெரேரா இணைந்துகொண்டார். டிஜிட்டல் சந்தைப்படுத்தல் ஆலோசகரான தேஷான் பெரேரா, இவர்களின் சந்தைப்படுத்தல் செயன்முறைக்கு உதவுகின்றார்.
சந்தா அடிப்படையிலான வணிக முறை மேற்கத்தேய நாடுகளில் பிரபலமான ஒன்றாகும். இதனை இலங்கை மக்களுக்கும் அறிமுகப்படுத்தும் முயற்சியாக DEOBOX உருவாகியது.
எவ்வாறாயினும், டியோடரன்கள் மட்டுமன்றி அடுத்த சில மாதங்களில் ஏனைய தயாரிப்புகளையும் சேர்த்து தமது வணிகத்தை விரிவுபடுத்த சுதாரவும் கஷினும் எதிர்பார்த்துள்ளனர்.
அந்தவகையில், எதிர்காலத்தில் ஆண்களுக்கான சவரக்கத்திகள் (ரேஸர்கள்), ஷாம்பூ போன்ற பொருட்களையும் பெண்களுக்கான அழகுசாதனப் பொருட்கள் மற்றும் சுகாதார பொருட்களையும் உள்ளடக்கிய ஒரு முழுமையான தீர்வை சந்தாதாரர்கள் எதிர்பார்க்கலாம்.
சந்தா அடிப்படையிலான வணிகத்தை நாட்டின் சகல பகுதிகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்களிடமும் மேம்படுத்துவதை DEOBOX நிறுவுனர்கள் நோக்கமாகக் கொண்டுள்ளனர். தற்போது வடக்கு, கிழக்கு மக்களும் இதில் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
“DEOBOXஇன் ஆரம்பம் பற்றி சுதார குறிப்பிடுகையில், “2019ஆம் ஆண்டு ஒக்டோபரில் DEOBOXஇற்கான பீட்டா பரிசோதனையை ஆரம்பித்து, ஒரு வருடம் பரீட்சித்தோம். அப்போது எமது வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் பெற்றுக்கொள்ளும் பொருட்கள் தொடர்பாக உற்சாகத்துடன் பதிலளிப்பதையும், அடுத்த மாதம் பொருட்களை பெற்றுக்கொள்ள ஆர்வத்துடன் காத்திருப்பதையும் அவதானித்தோம். அதனடிப்படையில், விலையுயர்ந்த டியோடரண்களை பட்ஜெட் விலையில் பெற்றுக்கொடுப்பதற்கான வழிமுறையை உருவாக்கினோம். அசல் பொருட்களின் தயாரிப்பாளர்களுடனான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து அதற்கான வாய்ப்பு கிடைத்தது. இதன்மூலம் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த உற்பத்திப்பொருட்கள் கிடைப்பதை உறுதிசெய்வதோடு, பயனர்களின் திருப்தியை மேம்படுத்த முடிந்தது” எனக் குறிப்பிட்டார்.
இந்த நிறுவனத்தில் இணைந்த பின்னர் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து கருத்துத் தெரிவித்த கஷின், “நாம் deobox.lk என்ற தளத்தை கட்டண வசதியுடன் ஆரம்பித்ததோடு, அதற்கு சழல்நிலை கட்டண வசதியை அறிமுகப்படுத்தினோம். இது, பயனர்களின் வசதிக்காக செயற்படும் மாதாந்த தானியங்கி கட்டண செயலாக்க அமைப்பாகும். எமது சந்தைப்படுத்தலுக்கு மூலோபாய திட்டங்களை வகுத்துள்ளதோடு, அது எமது பயனர் பயன்பாட்டு வீதத்தை அதிகரிக்க உதவியது. எமது வாடிக்கையார்களின் தேவைகளை பூர்த்திசெய்யும் வகையில் எமது செயற்பாடுகளை நேர்த்தியாக அமைத்துள்ளோம். பயனர் தக்கவைப்பு வீதத்தை 95 வீதமாக பேணவும், எமது சமூக ஊடக வலைத்தளங்களில் எமது வாடிக்கையாளர்களிடமிருந்து ஐந்து நட்சத்திர மதிப்பீட்டை பெற்றுக்கொள்வதற்கும் எமக்கு இந்த வசதிகளும் கட்டமைப்புகளும் உதவின” என்று கூறினார்.
Nike’, Adidas, Wild Stone, Fogg, Old Spice, Yardley, DENIM மற்றும் பல அசல் தயாரிப்புகள் தற்போதைய வாடிக்கையாளர்கள் மிகவும் விரும்பும் டியோடரன்ட் வகைகளாகும்.
ஆண்களுக்கான DEOBOX மற்றும் பெண்களுக்கான DEOBOX என தற்போது காணப்படும் சந்தா வகைகள் 850 ரூபாயிலிருந்து ஆரம்பிக்கின்றன. சந்தாதாரர்கள் ஒன்லைன் மூலமாகவோ அல்லது பொருட்களை பெற்றுக்கொள்ளும்போது நேரடியாகவோ பணத்தை செலுத்தலாம். தாம் விரும்புகின்றபோது சந்தா முறையை இரத்துச் செய்யவும் முடியும்.
அத்தோடு, பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து, மீண்டும் பயன்படுத்தக்கூடிய அட்டைப் பெட்டிகளுக்குச் செல்வது குறித்தும் DEOBOX நிறுவுனர்கள் அவதானம் செலுத்தியுள்ளனர். அன்புக்குரியவர்களுக்கும் குடும்பத்தாருக்கும் பரிசில்களை அனுப்புவதற்கான ஒரு அற்புதமான வழியை இந்த எண்ணக்கரு உருவாக்குகின்றது.