குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 17 ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷார்ட் பதியுதீன் மீண்டும் இன்று (24) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் குணமடைந்த பின்னர் மீண்டும் பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
நோய்வாய்ப்பட்டதால் அவரை மருத்துவ பரிசோதனைகளுக்காக அண்மையில் அவர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
தம்மை வைத்தியசாலையின் பணம் செலுத்தும் பிரிவில் அனுமதிக்குமாறு ரிஷார்ட் பதியுதீன் விடுத்த கோரிக்கையை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் ஏற்கனவே நிராகரித்திருந்ததாக மேலும் தெரியவருகின்றது.