July 2, 2022

2020 இல் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த பின்னர், பல்கலைக்கழக பிரவேசத்திற்காக விண்ணப்பிக்க முடியாமல் போனவர்களுக்காக மீண்டும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்பொருட்டு எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பல்கலைக்கழக பிரவேசத்திற்காக விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பத்தை பிரதி எடுத்து அதில் விண்ணப்பதாரியின் கையொப்பத்துடன், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் [email protected] எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

அத்துடன் 31 ஆம் திகதியின் பின்னர் ஆகஸ்ட் 14 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் விண்ணப்பதாரியினால் வழங்கப்படும் பல்கலைக்கழக தெரிவுகளில் மாற்றம் மேற்கொள்வதற்கும், விடயதானங்களில் மாற்றங்களை செய்வதற்கும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே விண்ணப்பங்களை அனுப்பிய நிலையில் தங்களின் விண்ணப்பங்களில் மாற்றங்களை செய்தவர்களுக்கு மீண்டும் அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது.

இதன் பிரகாரம் ஏதேனும் காரணத்தின் அடிப்படையில் இதுவரையில் விண்ணப்பிக்க முடியாமல் போன மாணவர்களுக்கு மாத்திரம் அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மேலும் கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.