July 1, 2022

கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் தலைவர் ஆர். ராஜமகேந்திரன் இன்று (25) காலமானார்.

அன்னார் கொழும்பு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அதிகாலை காலமானார்.

கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் Newsfirst ஊடக வலையமைப்பு, Shakthi TV, Siarasa TV, TV1 தொலைக்காட்சி அலைவரிசைகள், Shakthi FM, Siarasa FM, Yes FM, Y FM ஆகிய வானொலி அலைவரிசைகள் அடங்கலாக பல நிறுவனங்களுக்கு ராஜமகேந்திரன் தலைமை தாங்கி வழிநடத்தி வந்தார்.

தமது வழிகாட்டலில் இயங்கி வரும் சிரச, சக்தி, நியூஸ்பெஸ்ட் ஊடக வலையமைப்புகள் ஊடாக இலங்கை வாழ் மக்கள் பல்வேறு அனர்த்தங்களின்போது எதிர்நோக்கிய இன்னல்கள் மற்றும் பாதிப்புகளின்போது சிரச – சக்தி நிவாரண யாத்திரை, மக்கள் சக்தி ஆகிய மனிதநேய சேவைகள் மூலம் அளப்பரிய உதவித்திட்டங்களையும் முன்னெடுப்பதற்கு ராஜமகேந்திரன் வழிகோலினார்.

அதுமட்டுமன்றி இந்த நாட்டு மக்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அரசியல்வாதிகளை கட்சி பேதமின்றி தமது ஊடகத்தில் விமர்சிப்பதற்கும், பொது மக்களின் பணம் விரயமாக்கப்படும் சந்தர்ப்பங்களில் அவற்றை சரியாக அணுகி சம்பந்தப்பட்டவர்களின் முகத்திரைகளை களைவதற்கும், ஆட்சியிலுள்ளவர்களின் பிழைகளை தயங்காமல் சுட்டிக்காட்டுவதற்கும் ஒருபோது தயங்காமல் தமது ஊடக அணியை வழிநடத்திய பெருமை அவரையே சாரும்.

அதுமட்டுமல்லாது தனிப்பிட்ட ரீதியாகவும், தனக்குக் கீழ் பணியாற்றுகின்றவர்களிடத்திலும் எத்தகைய வேறுபாடுகளும் இன்றி சிரித்த முகத்துடன் செவிமடுத்து, இனிமையாக உரையாடும் பண்பும், மனித நேயமும் கொண்ட ஒரு மகாத்மாவாக அவர் நடந்துகொண்டமை அவருடன் பழகிய யாவராலும் புரிந்துக்கொள்ளக்கூடிய ஒரு விடயமாகும்.

Leave a Reply

Your email address will not be published.