இந்த (2021) ஆம் ஆண்டின் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையை தொடர்ந்தும் பிற்போடுவதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.
சாதாரண தரப் பரீட்சையை நடத்துவது தொடர்பான மீளாய்வுகளை மேற்கொண்ட பின்னர் பரீட்சையை அடுத்த வருடம் (2022) பெப்ரவரி 21 முதல் மார்ச் 03 வரையான காலப்பகுதிக்குள் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ,எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
2021 க்கான சாதாரண தரப் பரீட்சையை அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் நடத்துவதற்கு ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது.
நாட்டில் தற்போது நிலவும் கொவிட் தொற்று நிலைமைகளைக் கருத்திற்கொண்டு இந்த பொதுப் பரீட்சையை பிற்போடுவதற்குத் தீர்மானித்துள்ளதாக இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் பீரிஸ் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, கொவிட் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் துரிதமாக இடம்பெறுவதாகவும், இதுவரை 77 வீதமானவர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட அமைச்சர், செப்டெம்பர் மாத ஆரம்பத்தில் நாட்டிலுள்ள பாடசாலைகளை ஆரம்பிக்க முடியும் எனவும் குறிப்பிட்டார்.