ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாடுகள் தொடர்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுடன் இன்று நடைபெற்ற கலந்துரையாடல் உடன்பாடு எதுவும் எட்டப்படாமல் தோல்வியில் முடிவடைந்துள்ளது.
பிரதமருடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
தமது தரப்பினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு இதுவரை தீர்வுகள் கிடைக்கவில்லை என்பதால், ஒன்லைன் கற்பித்தல் நடவடிக்கைகளில் இருந்து ஆசிரியர்கள் தொடர்ந்தும் விலகியிருப்பார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.