July 4, 2022

 

கொவிட்-19 மரணங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில், ஓட்டமாவடியில் ஜனாசாக்களை நல்லடக்கம் செய்யும் மஜ்மா நகர் பகுதியில் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கொவிட் ஜனாசாக்களை மாற்று இடமொன்றில் நல்லடக்கம் செய்வதற்கான அவசர அனுமதியை சம்பந்தப்பட்டவர்கள் கோரியுள்ளனர்.

ஜனாசாக்களை நல்லடக்கம் செய்வதை சாப்பமடு என்ற பதிக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரையை மேற்கொள்ளுமாறு ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் அண்மையில் சுகாதார தரப்பினருக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதனையடுத்து, தற்போது இடநெருக்கடி ஏற்பட்டுள்ள ஓட்டமாவடி, மஜ்மா நகருக்குப் பதிலாக வேறொரு இடத்தில் ஜனாசாக்களை நல்லடக்கம் செய்வது தொடர்பாக சுகாதாரத் தரப்பினர்கள் ஆலோசனைகளை நடத்தி வருகின்றனர்

ஓட்டமாவடி – மஜ்மா நகர் பகுதியில் கடந்த புதன்கிழமை வரையில் (28-07-2021) 1170 ஜனாசாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக மேலும் அறியத்தரப்பட்டுள்ளது. (Kandy Tamil News)

Leave a Reply

Your email address will not be published.