பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் தலைவரும் பேராசிரியருமான ஸ்ரீ.பிரசாந்தன் இந்த வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தில் இயங்கிவந்த வளாகத்துக்கு அண்மையில், அரசாங்கத்தினால் தனியான பல்கலைக்கழக அந்தஸ்து அளிக்கப்பட்டது.
![]() |
வவுனியாப் பல்கலைக்கழக புதிய இலச்சினை |
இதனையொட்டி பேராசிரியர் ஸ்ரீ. பிரசாந்தன் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், வவுனியாப் பல்கலைக்கழகம் தனது தொடக்கப் புள்ளியிலேயே, பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையுடன் உறவுபூண்டுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
வவுனியாப் பல்கலைக்கழகம் தான் சார்ந்த மண்ணுக்கும் நம் நாட்டுக்கும் பெருமையும் புகழும் சேர்க்கும் வகையில், சிறந்தோங்கி வளரவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், ஆய்வு ரீதியிலும் கற்பித்தல் ரீதியிலும் அப்பல்கலைக்கழகமானது பலதுறைகளிலும் பிரகாசிக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத் தக்கது. (Kandy Tamil News)