இலங்கையில் வீட்டுப் பணியாளர்கள் தொடர்பில் தற்போது காணப்படும் கொள்கைகளை மேலும் வலுப்படுத்துவதற்கான பரிந்துரைகளை பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிடம் கையளித்தார்.
இந்த நிகழ்வு அமைச்சு அலுவலகத்தில் வைத்து கடந்த 02 ஆம் திகதி இடம்பெற்றது.
- பாராளுமன்ற உறுப்பினரால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளாவன,
- வீட்டுப் பணியாளர்களுடைய குறைந்தபட்ச வயதினை 18 ஆக ஆக்குதல்
- 85000 ஆகவுள்ள வீட்டுப் பணியாளர்களை பதிவு செய்தல்
- வீட்டுப் பணியாளர்களுக்கு ஆயுள் காப்புறுதி / ஊழியல் சேமலாம நிதியத்தை உருவாக்குதல்
- ஹிஷாலினி-189 எனும் வீட்டுப் பணியாளர் அவசர சேவை இலக்கத்தினை அறிமுகப்படுத்தல்
இந்த பரிந்துரைகளுடன் மேலும் சில ஆலோசனைகள் தொடர்பாகவும் பாராளுமன்ற உறுப்பினரால் தொழில் அமைச்சருடன் கலந்துரையாடப்பட்டுள்ளது. (Kandy Tamil News)