BREAKING NEWS: இலங்கை முழுவதும் இன்றிரவு 10 மணிமுதல் அதிகாலை 4 மணி வரையான தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நாளை (16) முதல் மறு அறிவித்தல் வரையில் இரவு 10 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை தொடர்ந்தும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த வேறு எந்தவித தேவைகளுக்காகவும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் எவரும் வௌியில் நடமாட முடியாது என்று மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது