புதிய பொலிஸ் ஊடகப் பேச்சாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரான சட்டத்தரணி நிஹால் தல்தூவ நியமிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் மாஅதிபர் சி.டி. விக்ரமரத்னவின் பணிப்புரைக்கு அமைவாக பொலிஸ் ஊடகப் பேச்சாளராக நிஹால் தல்தூவ நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதுவரைக் காலமும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹண பொலிஸ் ஊடகப் பிரிவிற்குப் பொறுப்பாகவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளராகவும் செயற்பட்டு வந்தார்.
அவர் நான்கு தடவைகள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பொலிஸ் ஊடகப் பேச்சாளராக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது. (KandyTamilNews)