இலங்கையில் நாளாந்தம் அதிகூடிய மரணங்களைத் தோற்றுவிக்கும் ஒரு காரணியாக #COVID19 மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஐந்து வருடகால தரவுகளுடன் ஒப்பிடுகையில் இந்த விடயம் புலனாவதாக தொற்றுநோயியல் நிபுணரும், மருத்துவ ஆராய்ச்சி விஞ்ஞானியும், சமூக மருத்துவப் பேராசிரியருமான சுனேத் அகம்பொடி தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அனைத்து வகையான இருதய கோளாறுகள்/ சுற்றோட்ட முறையிலான நிலைமைகள் காரணமாக நாளாந்தம் 87 மரணங்களும், நியோபிளாம்கள் காரணமாக 33 மரணங்களும், அனைத்து வகையான காயங்களால் 33 மரணங்களும் என தினசரி 153 மரணங்கள் பதிவாகின்றன.
இந்த மரண வீதங்களுடன் ஒப்பிடுகையில் தினசரி 170 மரணங்கள் COVID19 வைரஸினால் மாத்திரம் ஏற்படுவதாக பேராசிரியர் சுனேத் அகம்பொடி தனது டுவிட்டர் பதிவில் மேலும் கூறியுள்ளார். (KandyTamilNews)