மாவனெல்லையில் இடம்பெற்ற புத்தர் சிலையுடைப்பு சம்பவம் தொடர்பாக தகவல் வழங்கியமைக்காக பயங்கரவாத தாக்குதலுக்கு இலக்காகி அங்கவீனமுற்ற மொஹமட் தஸ்லீன் என்பவருக்கு இலங்கை பொலிஸ் சார்பாக 25 இலட்சம் ரூபா சன்மானம் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை பொலிஸ் சார்பாக இந்த சன்மானத் தொகையை பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் கலாநிதி சரத் வீரசேகர இன்று (18-08-2021) உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
இதன்போது பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ், பொலிஸ் மாஅதிபர் சந்தன விக்ரமரத்ன ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர். (KandyTamilNews)