July 4, 2022

கொவிட்19 வேகமாகப் பரவிவருகின்ற சூழ்நிலையில், நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் 20 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 1998 ரூபா பெறுமதியுடைய நிவாரணப் பொதியை சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக விநியோகிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்த நிவாரண சேவை நாளை முதல் (20-08-2021) எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக வர்த்தக விவகார அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் இந்த நிவாரணப் பொருட்கள் அடங்கிய பொதி விநியோகம் தொடர்பாக கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அமைச்சர் தௌிவுபடுத்தினார்.

இதன் பிரகாரம் 1998 என்ற அவசர அழைப்பு இலக்கத்துடன் தொடர்புகொண்டு, பொது மக்கள் நிவாரணப் பொதியை தங்களின் வீடுகளுக்கே தருவித்துக் கொள்ள முடியும் என்றும், அதற்காக விநியோகக் கட்டணம் அறவிடப்பட மாட்டாது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் குறித்த பொதியில் 2600 ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய 20 அத்தியாவசியப் பொருட்கள் அடங்கியுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

(KandyTamilNews)

Leave a Reply

Your email address will not be published.