இலங்கையினால் விடுக்கப்பட்ட அவசர கோரிக்கையின் பிரகாரம் 40 தொன் ஒட்சிசன் கப்பலில் ஏற்றப்படுவதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் கடற்படைக்கு உரித்தான SLNS Shakthi கப்பலில் சென்னையில் ஒட்சிசன் ஏற்றப்படுவதாக இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கைக்கான மருத்துவ ஒட்சிசன் விரைவில் இலங்கையை வந்தடையும் என்றும் அந்த பதிவில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கொவிட்-19 வைரஸின் தீவிர பரவல் காரணமாக நிலைமையை சமாளிப்பதற்குத் தேவைப்படும் ஒட்சிசனை தந்துதவுமாறு இந்திய அரசாங்கத்திடம் இலங்கையினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இருதரப்பு நட்புறவின் அடிப்படையில் இந்தியா இந்த உதவியை வழங்குவதற்கு முன்வந்தமை குறிப்பிடத்தக்கதாகும். (KandyTamilNews)