நாடு முழுவதும் இன்று இரவு 10 மணி முதல் 30ஆம் திகதி (30-08-2021) அதிகாலை 4 மணி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது
இந்த தகவலை இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதுதவிர தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகள், விவசாயம், ஆடைத் தொழில்துறைகள் மற்றும் மருந்தக சேவைகள் வழமையாக இயங்கும் எனவும் இராணுவத் தளபதி மேலும் கூறியுள்ளார். (KandyTamilNews)