Moderna தடுப்பூசி அதிக இதய அழட்சியை ஏற்படுத்தும் அபாயத்தைக் கொண்டுள்ளதா என அமெரிக்கா மீளாய்வை மேற்கொண்டு வருவதாக வொஷிங்டன் போஸட்டை மேற்கோள் காட்டி ரொய்ட்டர்ஸ் தகவல் வௌியிட்டுள்ளது.
முன்பு எண்ணியதைவிட இளம் வயதினருக்கு அரிதான இதய நோய்க்கான அபாயத்தை ஏற்படுத்துவதாக Moderna தடுப்பூசி அமையலாம் என்ற கோணத்தில் அமெரிக்க சுகாதார அதிகாரிகள் அந்த தடுப்பூசி தொடர்பிலான அறிக்கைகளை மீளாய்வு செய்துவருகின்றனர்.
மீளாய்வுடன் நெருங்கிய தொடர்புடையவர்களை மேற்கோள்காட்டி இந்த தகவலை ‘த வொஷிங்டன் போஸ்ட்’ வௌியிட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.
குறிப்பாக 30 வயதுக்குட்பட்ட ஆண்களில் Pfizer தடுப்பூசியை விட அதிக அபாயத்தைக் கொண்டிருக்கலாம் எனப் பரிந்துரைத்துள்ள கனேடிய தரவுகளை இந்த மீளாய்வு கவனத்திற் கொண்டுள்ளது.
எனினும், ஒழுங்குபடுத்தல்களை மேற்கொள்வோர் இதுதொடர்பான உடனடி முடிவுகளை எடுப்பது அவசர முடிவாக அமையலாம் என மற்றுமொரு தகவல் மூலத்தை மேற்கோள்காட்டி வொஷிங்டன் போஸ்ட் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் எந்தவொரு பரிந்துரையை செய்வதற்கும் முன்னர் கூடுதல் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வொஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் குறிப்பிட்டுள்ளது.
Source: Reuters / world