July 1, 2022

இலங்கை கடற்படைக்குச் சொந்தமான கப்பல் 40 ​தொன் ஒட்சிசன் வாயுவுடன்  இந்தியாவிலிருந்து இன்று (23-08-2021) நாட்டை வந்தடைந்தது.

இதற்கமைய கடந்த 20 – 23 ஆம் திகதிகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு 180 தொன் ஒட்சிசன் உதவியாக வழங்கப்பட்டுள்ளது. 

SLNS Shakthi என்ற கடற்படைக் கப்பல் சென்னையில் இருந்து ஒட்சிசன் வாயுவை ஏற்றிக்கொண்டு இலங்கையை வந்தடைந்ததாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலய உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் தகவல் வௌியிடப்பட்டுள்ளது.

கொவிட்-19 தீவிரமாக இலங்கையில் பரவ ஆரம்பித்ததை அடுத்து ஏற்பட்ட ஒட்சிசன் தேவையின் நிமித்தம் இலங்கை இந்தியாவிடம் உதவி கோரியிருந்த நிலையில் இந்திய அரசாங்கத்தினால் இந்த உதவி வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.