கொவிட் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த நிலையில் முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர காலமானதாக அன்னாரின் குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
நல்லாட்சி அரசாங்கத்தின் வௌிவிவகார மற்றும் நிதி அமைச்சுப் பொறுப்புகளை வகித்த அவர், இன்று தனது 65 ஆவது வயதில் காலமானார்.
அன்னார் கொவிட் தொற்று காரணமாக கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு நீண்டநாட்களாக சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். (KandyTamilNews)