July 2, 2022

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் அணுவாயுத பரிசோதனைகளைக் கண்காணிப்பதற்காகவே அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தினால் கண்டி – பள்ளேகலையில் நில நடுக்க அளவை நிலையம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் வரைபடப் பிரிவு பணிப்பாளர் அஜித் பிரேம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வௌியாகியுள்ளன.

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பூரண அணுசரணையுடனும், புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் ஒத்துழைப்புடன் பள்ளேகலையில் நில அதிர்வு அளவீட்டு நிலையத்தின் நிர்மாணப் பணிகள் 1999 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எனினும் நிர்மாணப் பணிகள் 2000 ஆம் ஆண்டிலேயே முன்னெடுக்கப்பட்டதாகவும் அந்த தகவல் குறிப்பிடுகின்றது.

நில அதிர்வை அளவிடும் மானியானது பள்ளேகலை திறந்தவௌி சிறைச்சாலை வளாகத்தில் 100 மீற்றர் ஆழத்திற்கு துளையிடப்பட்டு பொருத்தப்பட்டுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவிக்கின்றது.

இங்குள்ள நில அதிர்வு அளவீட்டு மானியின் தரவுகள் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தினாலும் கண்காணிக்கப்பட்டு வருவதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. (Kandy Tamil News)

Leave a Reply

Your email address will not be published.