எதிர்வரும் ஒக்டோபர் 18ஆம் திகதி முதல் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ளுமாறு ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதற்கமைய பாடசாலை அதிபர்களின் தலைமையில் பிரதேச சபை மற்றும் பெற்றோர்களின் உதவியுடன் தொற்று நீக்கம் மற்றும் சிரமதானப் பணிகளை முன்னெடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாகாணங்களுக்கு இடையேயான பயணத் தடை தொடர்ந்தும் அமுலில் காணப்படுவதால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகாமல் பாடசாலைகளுக்கு வருவதற்கான போக்குவரத்து ஏற்பாடுகளைச் செய்யுமாறும் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் ஆசிரியர்கள் மற்றும் கல்வி உதவியாளர்கள் தடுப்பூசி பெற்றுள்ளதனை உறுதிப்படுத்துமாறும், மாணவர்களுக்கான போக்குவரத்து சேவையில் ஈடுபடும் சாரதிகள் மற்றும் உதவியாளர்கள் தடுப்பூசி பெற்றிருப்பது கட்டாயம் எனவும் நேற்று (01) நடைபெற்ற மாகாண கல்விக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. (Kandy Tamil News)