உலக ஆசிரியர் தினமான ஒக்டோபர் 6 ஆம் திகதி பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுப்பதற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் தீர்மானித்துள்ளது.
எத்தகைய தடை அல்லது இடையூறுகள் ஏற்பட்டாலும் தீர்மானிக்கப்பட்டவாறு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பாடசாலைகளுக்கு கடமைக்குத் திரும்ப வேண்டுமாயின், தமது நடைமுறை பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
312 வலயக் கல்வி அலுவலகங்களை அடிப்படையாகக் கொண்டு ஆசிரியர்களின் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. (Kandy Tamil News)