July 1, 2022

Pandora Papers: உலகத் தலைவர்கள் பலரது சொத்துகள் மற்றும் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பிலான பாரிய நிதி நிலை பற்றிய இரகசிய ஆவணங்கள் கசிந்துள்ளன.

உலகத் தலைவர்கள், அரசியல்வாதிகள், பில்லியனேயர்கள் உட்பட 35 நிகழ்கால மற்றும் முன்னைய தலைவர்கள் மற்றும் 300 அரச அதிகாரிகளின் பாரிய நிதிநிலை இரகசிய ஆவணங்கள் ‘பண்டோரா பேப்பர்ஸ்’ எனும் பெயரில் கசிந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இவர்கள் தங்களின் நிதிநிலை தொடர்பான இரகசிய ஆவணங்களை கரைகடந்த நாடுகளின் நிதி நிறுவனங்களில் இரகசியமாக பேணி வருகின்றமை தொடர்பில் பல்வேறு தகவல்களும் வௌிச்சத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.

ஜோர்தான் மன்னர் 70 மில்லியன் பவுண்ட்ஸ் மற்றும் அமெரிக்காவில் சொத்துகளை இரகசியதாக பேணி வருகின்றமை இந்த ஆவணங்கள் மூலம் கசிந்துள்ளது.

இதுதவிர பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டொனி பிளயார் மற்றும் அவரது மனைவி ஆகியோர் முத்திரை வரி 312,000 பவுண்ட்ஸ்களை மோசடி செய்திருப்பதும் இந்த ‘பண்டோரா பேப்பர்ஸ்’ ஆவணக் கசிவின் ஊடாக வௌிச்சத்திற்கு வந்துள்ளது.

மேலும் இந்த ஆவணக் கசிவில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் இரகசிய சொத்துகள் மொனோக்கோவில் இருப்பதும், செச் பிரதமர் அன்ரிஜ் பாபிஸ் தேர்தலை எதிர்கொண்டுள்ள நிலையில் அவரது வௌிநாட்டு சொத்துகள் தொடர்பில் பிரகடனம் செய்யாமை, வௌிநாட்டு நிறுவனம் ஒன்றின் ஊடாக பிரான்ஸில் 12 மில்லியன் பவுண்ட்ஸ் பெறுமதியான இரண்டு வில்லாக்களை கொள்வனவு செய்திருப்பது போன்ற விடயங்களும் அம்பலமாகியுள்ளன.

கடந்த ஏழு வருடங்களின் வௌியாகிய பல்வேறு பாரிய நிதி மோசடிகள் தொடர்பான ஆவணக் கசிவுகளுடன் ஒப்பிடுகையில் இதுவே மிகப் பாரிய மோசடியாக கருதப்படுகின்றது.

வகையான மூலங்களில் இருந்து, 11,903,676 கோவைகள் மற்றும் 2.4TB தரவுகள் மூலம் ‘பண்டோரா பேப்பர்ஸ்’ என்ற இரகசிய ஆவணக் கசிவு பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது. (Kandy Tamil News)




Leave a Reply

Your email address will not be published.