தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபையின் அழிக்கப்பட்ட தரவுகளை மீளப் பெறும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தரவுகளை மீளப் பெறும் நடவடிக்கைகள் விசேட குழுவொன்றினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஔடதங்கள் உற்பத்தி, ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஔடதங்கள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபையின் தரவுகள் அழிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என கைதுசெய்யப்பட்டிருந்த சந்தேகநபர் எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். (Kandy Tamil News)