July 4, 2022

ஶ்ரீலங்கன் விமானம் மூலம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் மற்றும் இலங்கையிலிருந்து வௌியேறும் பயணிகளுக்கான முக்கிய பயண அறிவித்தலை ஶ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனம் விடுத்துள்ளது.

இதன் பிரகாரம் வௌிநாடுகளில் இருந்து நாட்டிற்கு வரும் பயணிகளுக்கு கொவிட்-19 பரவல் காலப்பகுதியில் பின்பற்ற வேண்டிய தனிமைப்படுத்தல் தொடர்பில் சில நடைமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

வௌிநாட்டவர்கள் மற்றும் இரட்டை பிரஜாவுரிமை கொண்ட வௌிநாட்டு கடவுச் சீட்டு வைத்திருப்பவர்கள் வௌிவிவகார அமைச்சு மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை ஆகிய பிரிவுகளில் அனுமதி பெறவேண்டும் என நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த விதிமுறை நேற்றிரலிருந்து (03) இரத்து செய்யப்பட்டுள்ளது.

அதேநேரம் இலங்கைப் பிரஜைகள், இலங்கை கடவுச் சீட்டை வைத்திருக்கும் இரட்டைப் பிரஜாவுரிமை பெற்றவர்கள் மேற்படி அனுமதியைப் பெற வேண்டியதில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இலங்கைக்கு வரும் போது விமான சேவைகள் நிறுவனத்துடனான இணக்கத்தின் அடிப்படையில் வசதிகளை செய்துகொள்ள முடியும்.

தனிமைப்படுத்தலுக்கு உட்படுவதானால் அதற்கான வேண்டுகோளை முன்வைத்து, தனிமைப்படுத்தலுக்கான ஹோட்டலையும் முன்பதிவு செய்துகொள்ள முடியும்.

இந்த புதிய நடைமுறைகள் தொடர்பில் பின்வரும் இணைப்பின் ஊடாக மேலதிக விபரங்களை அறிந்துகொள்ள முடியும். (Kandy Tamil News)

Important notice for passengers traveling to and from Sri Lanka


Leave a Reply

Your email address will not be published.