துப்பாக்கி வைத்திருப்பதற்கான அனுமதிப்பத்திரங்களை புதுப்பிப்பதற்கான கால எல்லையை பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
சுடுகலன் வைத்திருப்பதற்கான அனுமதி பெற்றுள்ளவர்கள் மற்றும் நிறுவனங்கள் டிசம்பர் 01 ஆம் திகதி முதல் 2022 பெப்ரவரி 28 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் தங்களின் அனுமதிப்பத்திரங்களை புதுப்பித்துக் கொள்ளமுடியும் என பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
செல்லுபடியான அனுமதியின்றி சுடுகலன்களை தம்வசம் வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. (kandytamilnews.com)