July 4, 2022

நள்ளிரவு (10) முதல் அமுலாகும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை திடீரென அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய லிட்ரோ 12.5, 5 மற்றும்  2.5 கிலோகிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன.

12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 1257 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 2750 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.

5 கிலோகிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 503 ரூபாவால் உயர்த்தப்பட்டு, புதிய விலை 1101 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலையும் 231 ரூபாவால் அதிகரித்து 520 ரூபாவுக்கு விற்கப்படும் என மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது. (kandytamilnews.com)

Leave a Reply

Your email address will not be published.