PayPal கட்டண சேவைகளைப் இலங்கை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மத்திய வங்கி மேற்கொண்டு வருகின்றது.
இதுபற்றி PayPal நிறுவனத்தின் இந்தியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலுள்ள பிராந்திய அலுவலகங்களுடன் அரசாங்கம் கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி செய்திகள் வௌியாகியுள்ளன.
PayPal ஊடக மாத்திரமே உலகளாவிய ரீதியில் கட்டணங்களை முறையாக பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன், இலங்கை இதுவரை அந்த வசதியைப் பெற்றுக்கொள்ளவில்லை.
இந்த நிலைமையின் கீழ், PayPal கட்டணங்களை மேற்கொள்வதற்கான சேவைகளைப் பெற்றுக் கொள்வதில் இலங்கைக்கு எவ்வித தடையும் காணப்படவில்லை என்று மத்திய வங்கி மேலும் குறிப்பிட்டுள்ளது. (kandytamilnews.com)