பால் தேநீர், உணவு பார்சல் ஆகியவற்றின் விலைகள் 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த விலையுயர்வு நாளை (12) முதல் அமுல்படுத்தப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
பால்மா, கோதுமை மா மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைகள் நேற்று முதல் சடுதியாக அதிகரித்துள்ள பின்புலத்தில் தேநீர் மற்றும் உணவு பார்சல் ஆகியவற்றின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (kandytamilnews.com)