பாராளுமன்ற உறுப்பினர் ரிஷார்ட் பதியுதீன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் (PTA) கீழ் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷார்ட் பதியுதீன் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
இன்றைய தினம் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில், நீதிமன்றத்தினால் ரிஷார்ட் பதியுதீனுக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தனது வீட்டில் பணியாற்றிய 16 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கிலும் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷார்ட் பதியுதீனுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் ரிஷார்ட் பதியுதீனை பிணையில் விடுவிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
(kandytamilnews.com)