July 1, 2022

டிஜிட்டல் பாதுகாப்பின் முக்கியத்துவம் கருதி இன்டர்நியுஸ் ஸ்ரீலங்காவின் பாதுகாப்பான நிகழ்ச்சித்திட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதில் பயிற்றுவிப்பாளர்களாக பயிற்சிபெற்ற ஊடகவியலாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள், நாடு முழுவதும் பயிற்சிநெறிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அதன் ஒரு அங்கமாக அண்மையில் பதுளை ஊவா சக்தி

அமைப்பின் செயற்பாட்டாளர்களுக்கு டிஜிட்டல் பாதுகாப்பு பயிற்சி வழங்கப்பட்டது.

பயிற்சிநெறியை, இன்டர்நியுஸ் ஸ்ரீலங்காவின் புலமைப்பரிசில்தாரரும் ஊடகவியலாளருமான கலாவர்ஷ்னி கனகரட்ணம் வழங்கினார்.

 

இதன் ஆரம்ப நிகழ்வில் பங்கேற்ற ஊவா சக்தி அமைப்பின் தலைவர் சுரேஷ் நடேசன் கருத்து தெரிவிக்கையில்,

கொவிட் நிலைமைக்கு பின்னர் டிஜிட்டல் உலகோடு நாம் ஒன்றித்து பயணிக்கின்றோம். அதன்போது, எமது அடையாளங்கள், தரவுகள் போன்றவற்றை பாதுகாத்துக்கொண்டு வினைத்திறனுடன் செயற்பாடுகளை முன்னெடுக்க இவ்வாறான பயிற்சிநெறிகள் அவசியம் என வலியுறுத்தினார்.

எதிர்காலத்தில் மலையகத்தின் பல பகுதிகளில் இந்த நிகழ்ச்சித்திட்டத்தை விரிவுபடுத்துவதோடு, பாடசாலை மட்டத்திலும் இதனை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published.