
பின்தங்கியுள்ள தோட்டப் பகுதிகளில் தற்போது உணவுத் தட்டுப்பாடு நிலவியுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேஷன் தெரிவிக்கின்றார்.
இன்னும் ஒருசில மாதங்களில் தோட்டப்புற மக்கள் பட்டினிச் சாவை எதிர்நோக்க நேரிடலாம் என மனோ கணேஷன் தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
பட்டினிச் சாவு ஏற்படுவதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ரணில் விகரமசிங்கவுக்கு மனோ கணேஷன் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அத்துடன், தரிசாகவுள்ள நிலங்களை தோட்டத் தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிக்குமாறும் அவர் பிரதமரிடம் கோரியுள்ளார்.
தொழிலாளர்கள் தங்களின் உணவுத் தேவைக்கான பயிர்ச் செய்கை மேற்கொண்டு வீட்டுத் தேவைக்கும், நாட்டுத் தேவைக்கும் வழங்குவார்கள் என பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக மனோ கணேஷன் டுவிட்டரில் மேலும் கூறியுள்ளார்.
දුර්වල තත්ත්වය පවතින වතුවල ආහාර හිඟයක් ඇති වෙලා. තව මාස කිහිපයකින් කුසගින්නෙන් වතුවල ජනතාව මැරෙන්න පුළුවන්. මෙම මියයෑම වළක්වන්න පියවර ගන්න. පුරන්වූ මුඩු ඉඩම් වතුකම්කරුවන්ට බෙදා දෙන්න. කම්කරුවන්, ආහාර බෝග අස්වැද්දා ගෙදරටත්, රටටත් ලබා දෙයි. අගමැති @RW_UNP ලිපියකෙන් පැවසුවා. #lka pic.twitter.com/NskfT5TTqi
— Mano Ganesan (@ManoGanesan) May 31, 2022